திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் பொற்றாளம் அளித்த தலம். இப்பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தால், அம்பிகை 'ஓசை கொடுத்த நாயகி' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'தாளமுடையார்', 'சப்தபுரீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன், சதுர ஆவுடையுடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'ஓசை கொடுத்த நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7 மணி முதல் 11 வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 வரையிலும் திறந்திருக்கும்.
|